தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையானது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசுத் துறை வாகனங்களை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளும் ஒரு சேவைத் துறையாகும். மாண்புமிகு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை உடனுக்குடன் பழுதி நிவர்த்தி செய்யவும், சென்னை மாநகரத்தில் இயங்கி வரும் நவீனரக வாகனங்களை பழுது நீக்கம் / பராமரிக்க நவீனமயமாக்கப்பட்ட புதிய இயந்திரங்களை கொண்டு வாகனங்களின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், அனைத்து அரசுத் துறை வாகனங்களை பழுதுபார்ப்பதற்காக மாநிலம் முழுவதும் 20 அரசு தானியங்கிப் பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன.

புகைப்பட தொகுப்பு

அறிவிப்புகள்